Saturday, September 26, 2009

உன் கடிதங்கள்

என் மேஜை
எங்கும் உன் கடிதங்கள்
சிதறிக் கிடக்கின்றன ...
அவைகளுக்குப்  போட்டியாய்
என் கண்ணீர் துளிகளும் ...

எங்கேயடி இருக்கிறாய் ?

நான் களைப்புற்று நிற்கையில்
எல்லாம் என் தோள் தாங்குவாயே ...
நான் தோற்கும் பொழுதெல்லாம்
என் தலை தடவிக் கொடுப்பாயே ...
இப்பொழுது மட்டும் எங்கேயடி போனாய் ?

உன்னைப் போலவே

காலை நேர அலுவலக
அவசரத்தில் சாலை கடக்கும்
பொழுது கூட, உன் சாயலில்
யாரோ ஒருத்தி சாலை கடக்கையில்
மனம் அது நீயாக
இருக்கக் கூடாதா என்று
என்னை திரும்பிபார்க்கச் சொல்லும்
பின் ஏமாற்றமாய் சட்டென்று தலை  கவிழும் .

மறக்க முடியவில்லை

உன் சின்னச்  சின்னப் 
பொய்கள் எனக்குப் பிடிக்கும் .
அப்பொழுதெல்லாம் உன் கண்கள்
என்னை துளைத்துப் பார்க்கும் ...
நான் என்ன செய்யப் போகிறேனோ
என்று, அதை ...

மறக்க முடியவில்லை

பொய் சொல்வது
தெரிந்தும் - உன்னை
புகழ்வதால் வெட்கத்துடன்
உன் கண்கள் நாணுமே, அதை ....

எனக்கு நானே...

எனக்கு நானே
பேசிக்கொள்கிறேன் ...
கேப்பதற்கு தான் - நீ
என்னருகில் இல்லையே 

தபால்காரர்

பக்கத்துக்கு வீட்டுக்கு  
தபால்காரர் வரும்பொழுதெல்லாம்
என்னுள் என்னை அறியாது
ஒரு பெருமூச்சு ஓடும் .

அழைப்பு மணி

அழைப்பு  மணி  கேட்டு
அவசரமாய் கதவு திறக்கிறேன் ...
அழைப்பது நீயாக இருக்க கூடாதா என்ற ஏக்கத்துடன் ...

வேறு யாரோ ஒருவர் அங்கு நிற்கையில்
உள்ளே எதோ ஒன்று
சட்டென்று சுருங்கிப் போகும் .

நிஜம்

தூக்கத்தில் அடிக்கடி விழித்துப் பார்கிறேன்
நீ கூப்பிடும் குரல் கேட்டு ...

பிறகுதான் புரிந்தது
நீ இங்கு இல்லவே இல்லை என்று ...

தவம்

இப்பொழுதெல்லாம் எந்த வீட்டில்
தொலைபேசி மணி அடித்தாலும்
என் தொலைபேசியை
எடுத்து பார்த்துக்கொள்கிறேன் ...

அழைப்பது நீயாக இருக்க கூடாதா
என்று என் செவிகள் நாளும்  தவமிருக்கின்றன.

என் பேனா

முன்பெல்லாம் என் பேனா
காகிதத்தின் முன் தலை கவிழும் பொழுதெல்லாம்
என்னை உலுக்கும் ...
"உலக சரித்திரங்களை புரட்டிபோட்ட
என்னை தலை கவிழ வைக்கிறாயே " என்று ...

ஆனால் எப்பொழுது எல்லாம்
என்னை பார்த்து புன்னகைக்கிறது
நான் எழுதுவது "உன் பெயரை " அல்லவா !

Wednesday, September 23, 2009

உன் நினைவுகள்

என் வழி நெடுகிலும் 
நெருஞ்சி முட்களாய் 
உன் நினைவுகள். 

Tuesday, September 22, 2009

என் கோப்பை

என் கோப்பை
எப்பொழுதுமே வேற்று கோப்பையாகவே
இருக்கிறது ....
ஊற்ற ஊற்ற காலியாகவே இருக்கிறதே
ஏன் ?!