Saturday, September 26, 2009

உன் கடிதங்கள்

என் மேஜை
எங்கும் உன் கடிதங்கள்
சிதறிக் கிடக்கின்றன ...
அவைகளுக்குப்  போட்டியாய்
என் கண்ணீர் துளிகளும் ...

எங்கேயடி இருக்கிறாய் ?

நான் களைப்புற்று நிற்கையில்
எல்லாம் என் தோள் தாங்குவாயே ...
நான் தோற்கும் பொழுதெல்லாம்
என் தலை தடவிக் கொடுப்பாயே ...
இப்பொழுது மட்டும் எங்கேயடி போனாய் ?

உன்னைப் போலவே

காலை நேர அலுவலக
அவசரத்தில் சாலை கடக்கும்
பொழுது கூட, உன் சாயலில்
யாரோ ஒருத்தி சாலை கடக்கையில்
மனம் அது நீயாக
இருக்கக் கூடாதா என்று
என்னை திரும்பிபார்க்கச் சொல்லும்
பின் ஏமாற்றமாய் சட்டென்று தலை  கவிழும் .

மறக்க முடியவில்லை

உன் சின்னச்  சின்னப் 
பொய்கள் எனக்குப் பிடிக்கும் .
அப்பொழுதெல்லாம் உன் கண்கள்
என்னை துளைத்துப் பார்க்கும் ...
நான் என்ன செய்யப் போகிறேனோ
என்று, அதை ...

மறக்க முடியவில்லை

பொய் சொல்வது
தெரிந்தும் - உன்னை
புகழ்வதால் வெட்கத்துடன்
உன் கண்கள் நாணுமே, அதை ....

எனக்கு நானே...

எனக்கு நானே
பேசிக்கொள்கிறேன் ...
கேப்பதற்கு தான் - நீ
என்னருகில் இல்லையே 

தபால்காரர்

பக்கத்துக்கு வீட்டுக்கு  
தபால்காரர் வரும்பொழுதெல்லாம்
என்னுள் என்னை அறியாது
ஒரு பெருமூச்சு ஓடும் .